பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் வாரம் பிரபல செய்தி வாசிப்பாளர் பார்த்திமா பாபு வெளியேறினார். அவரை தொடர்ந்து நடிகை வனிதாவும், கடந்த வாரம் மோகன் வைத்தியாவும் வெளியேறினர்.

இந்நிலையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. 

எப்போதும், தன்னுடைய விஷயத்தை நியாயப்படி அதற்காக போராடி வரும் மீரா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் நன்றாக இருக்கும் என சிலர் தெரிவித்தாலும், ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை ஆதரித்தும் வருகின்றனர். அவர் சொல்லும் விதம் அவரை கெட்டவர் போல் காட்டினாலும், மீரா சொல்லும் விஷயங்களில் உண்மை உள்ளது என்பதே சிலரது விவாதமாகவும் இருக்கிறது.

மேலும் இந்த வாரம், நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள, கவின், சாக்ஷி, சேரன், மீரா, மாற்று சரவணன் ஆகியோரில் யார் வெளியேறுவார் என்கிற குழப்பமான மனநிலை தான் அனைவர் மத்தியிலும் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் , பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் , மீரா மிதுன் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.