பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தலைவருக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த வாரம் தலைவர் போட்டியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை கிராமத்து டாஸ்கின் மூலம் தேர்வு செய்துள்ளார் பிக்பாஸ்.

இந்த டாஸ்கில்,  தங்களுடைய கதாப்பாத்திரத்தில் இருந்து வெளியே வராமல் இருந்த இருவரையும், கடைசிவரை தன்னுடைய  கதாபாத்திரத்தில் சிறப்பாக விளையாடிய ஒருவரையும், போட்டியாளர்களே தேர்வு செய்ய சொன்னார் பிக்பாஸ்.

அதன்படி மீரா மிதுன், தர்ஷன், மற்றும் ஆகியோர் ஒருமனதாக அனைத்து போட்டியாளர்கள் சார்பாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் மூவரின் ஒருவர், இந்த வாரத்தின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .