நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில்,  குறும்படம் போட்டு சாக்ஷி மீது தான் தவறு உள்ளது. மீரா மேல் தவறு இல்லை என்பதை நிரூபித்தார் கமல். இதனால், இத்தனை நாள் மீரா மீது கோவமாகவே இருந்த போட்டியாளர்களுக்கு இவர் மேல் ஒரு சாப்ட் கார்னெர் வர துவங்கியுள்ளது. அதே போல் மீராவை தவறான நினைத்து கொண்டிருந்த ரசிகர்கள் சிலரும், உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது குறும்படம்.

சாக்ஷி தான் மீட்டிங் பற்றி கூற வில்லை என அடித்து கூறியது தவறாகி போனதால், அனைவர் முன்னிலையில் தலைகுனியும் சூழல் உருவானது. 

சரி நேற்று தான் இப்படி என்று பார்த்தால், இன்றைக்கும் இவரை வச்சி செய்ய காத்திருக்கிறார் கமலஹாசன். அதாவது போட்டியாளர்களுக்கு தெரியாமல், பின்னல் சென்று பேசிய வார்த்தைகளை கூறி கண்டு பிடிக்குமாறு கூறுகிறார்.

நடிகர் சேரனிடம், 'சாத்தன் வேதம் ஓதுது'  என்று உங்களை பற்றி ஒருவர் கூறியுள்ளார் அவர் யார் என்று கண்டு பிடிக்குமாறு கூறுகிறார். பின் அவரை தொடர்ந்து கவினிடம்  கிளாப் வாங்குவதற்காக ட்ராக் மாறுகிறான் என்று சாக்ஷி கூறிய வார்த்தையை கூறுகிறார். 

இதனை கவினை பார்த்து கமல் கூறியதுமே சாக்ஷியின் முகம் மாறுகிறது. இது போன்ற வார்த்தைகள் மூலம் கவின் சாக்ஷி அவரையே பற்றி பின்னல் சென்று பேசுவதை புரிந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.