உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 , அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் துவங்க உள்ளது. இதனை உறுதி படுத்தும் விதமாக, தொடர்து பல புரோமோக்கம் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரபல ஸ்டார் ஓட்டலில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது... இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புது பட்டியல் வெளியாகி, இது தான் இறுதி பட்டியல் என கூறப்படுகிறது.  இதில் ஏற்கனவே வெளிவந்த பட்டியலில் இடம்பெற்ற பல போட்டியாளர்களும், சில புது போட்டியாளர்களும் இணைந்துள்ளனர்.

அந்த வகையில், நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், ஆர்ஜே அர்ச்சனா மற்றும் இவர்களோடு தற்போது விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆண் போட்டியாளர்களை பொறுத்தவரை இளம் பாடகர் ஆஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த மூன்று சீசன்களை விட, இந்த சீசன் எந்த அளவிற்கு  விறுவிறுப்பாக இருக்கும் என்பதை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.