பிக்பாஸ் சீசன் 2 நிகழ்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் இரண்டாவது நாள் நிகழ்ச்சி இன்று ஒளிப்பரப்பாக உள்ளது. 

நேற்றைய தினம் வெங்காய பிரச்சனை போன்றவற்றை சிரித்துக்கொண்டே போட்டியாளர்களிடம் கேட்ட கமல், இன்று உண்மையிலேயே ஜாலியாக பேசுவார் என்று தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

தற்போது வெளியான ப்ரோமோவில்... கமல் சில பெயர்கள் காட்டுகிறேன் அதற்கு சரியான ஆட்கள் யார்..? என போட்டியாளர்கள் கூற வேண்டும் என்று தெரிவிக்கிறார். முதலில் 'நாட்டாமை' என்ற பெயர் கொண்ட அட்டையை காட்டுகிறார். அதற்கு சென்ராயன் மும்தாஜ் என்கிற பதிலை கூறுகிறார். 

அடுத்ததாக, பாலாஜி தன்னுடைய மனைவி நித்யா பெயரை கூறுகிறார். மேலும் பிரச்சனை என்றால் அனைவரும் நாட்டாமை கிட்ட போகலாம் ஆனால் நாட்டாமையே இங்கு பிரச்சனை செய்து வருவதாக கூறுகிறார். 

அடுத்ததாக காதல் மன்னன் என்கிற அட்டையை காட்டுகிறார். இதற்கு ஆனந்த் வைத்திய நாதன் இந்த வீட்டில் காதல் மன்னன் பாலாஜி தான் என்றும், அவர் தான் நித்யா பின் சுற்றி சுற்றி வந்ததாக கூறுகிறார். இதற்கு டானியல் பாலாஜியை கலாய்ப்பது போல், கல்யாணம் பண்ணிய பொன்டாட்டி பின்னாடி போன மனுஷன் இவர் தான் என கூறுகிறார். இதற்கு கமல் பிரெண்டே லவ் மேட்ரே நமக்கே தெரிஞ்சிருச்சே... என்று கூறியபோது  அரங்கமே சிரிப்பில் மூழ்கியது.