என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன்1 போல இந்த் இரண்டாவது சீசன் இல்லை என புலம்பினாலும், சீசன்2க்கு என தனி ரசிகர்கூட்டம் இருக்க தான் செய்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியையும் , அதில் வரும் போட்டியாளர்களையும் விமர்சித்து விமர்சித்தே பொழுது போக்கிய பிக் பாஸ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. 

பிக் பாஸ் வீட்டிலிருந்து அனைவரும் காலி செய்து போன பிறகு , ஏதோ பக்கத்துவீட்டில் இருந்த யாரோ வீட்டை காலி செய்து போனது போன்று ஃபீலிங்கில் இருக்கும் பிக் பாஸ் ரசிகர்களுக்காக அவ்வப்போது பிக்  பாஸ் பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைத்தும், சிறப்பு நிகழ்ச்சி நடத்தியும் , எண்டெர்டெயின் செய்து வருகிறது விஜய் டிவி.

என்ன தான் இருந்தாலும் பிக் பாஸ் பார்த்த மாதிரி இல்லை என புலம்பும் ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது வரும் என இப்போதே காத்திருக்கவும் தொடங்கிவிட்டனர். இதனிடையே சமீபத்தில் ”வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 3” என்று ஒரு பிரமோவை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இந்த பிக் பாஸ் வழக்கமான நிகழ்ச்சி மாதிரி கிடையாது. முழுக்க முழுக்க காமெடியான பிக் பாஸ் தான் இது.

வழக்கமாக ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் கான்செப்டாக எடுத்து கலாய்த்திருக்கிறது. சிரிச்சா போச்சு அணி. அதை தான் இந்த டைட்டிலில் பிரமோவாக போட்டிருக்கின்றனர். குறைந்த பட்சம் இந்தபுதிய பிக் பாஸ் வீட்டின் காமெடியை பார்த்தாவது ஆறுதல் கொள்வார்கள் தானே பிக் பாஸ் ரசிகர்கள்.