முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் பாட்டம் என ஒன்று கூடி இருந்தனர் பிக்பாஸ் பிரபலங்கள். குறிப்பாக கவின் சோறுன்னு வந்துட்டா, பிக்பாஸ் குடும்பம் சண்டை போடாமல் இருக்கும் என பாடல் ஒன்றையும் பாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சேரனுக்கும் மீராவிற்கும் பிரச்சனை வெடித்துள்ளது தெரிகிறது.

ஆரம்பத்திலேயே, மீரா நாட்டாமை சேரனை பார்த்து... நீங்க நியாயமா பேசுற மாதிரி எனக்கு தெரியவில்லை என கூறுகிறார். உடனே மது அவர் அந்த டாஸ்கில் இன்வால் ஆகிவிட்டார் என கூறுகிறார். இதை தொடர்ந்து லாஸ்லியாவும் டான்ஸ் ஆடியது குறித்து கேள்வி எழுப்பி அது தப்புனு தெரியவில்லையா என கேட்கிறார்.

ரேஷ்மாவும், சேரனுக்கு சப்போர்ட் செய்து அவர் தான் வேணும்னு  செய்யல என சொல்லிட்டாரே விட்டுடுங்க என கூறுகிறார். இவை அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சேரன், கடைசியில் தன்னுடைய இரண்டு கைகளையும் உயர்த்தி எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என கூற, மதுமிதா ஏல்லோருக்கும் நீங்கள் மன்னிப்பு கூற வேண்டும் என கூறுகிறார்.

இனி நான் யார் கிட்டையும் பேசல, யார் கிட்டயும் பழகல என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். நான் இனி வேற ஆளு என அவர் மிகவும் அப்சட்டாக செல்லும் காட்சி இரண்டாவது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.