ஜூன் 23 ஆம் தேதி, அதாவது நாளை இரவு 8 மணிக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸ் முதல் சீசனில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்து, ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எந்த ஒரு வெறுப்பையும் சம்பாதிக்காமல், வெளியேறியவர், டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான காஜல் பசுபதி. இவருடைய முன்னாள் கணவர் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை பிக்பாஸ் தமிழ் 3 வது சீசன் துவங்க உள்ளதை ஒட்டி, போட்டியில் பங்கேற்க உள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

இந்த பட்டியலின், பிரபல நடன இயக்குனர் சாண்டியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளதோடு, பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவருக்கும்  தொகுப்பாளர் காஜலுக்கும்  விவாகரத்து ஆன நிலையில், காஜல் பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, சாண்டி அவருடைய ரசிகை சில்வியா என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் காமெடி நடிகை பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்தியா ஆகியோர், கருத்து வேறுபாடுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து, விவாகரத்து ஆன பின் முன்னாள் மனைவி காஜல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தற்போது சாண்டி கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.