பிக்பாஸ் சீசன் 3 நடிகை ஒருவர் உலகை விட்டு விடைபெறுகிறேன் என்கிற பதிவு ஒன்றை ட்விட்டர் பகுதியில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன அழுத்தம் காரணமாக சமீபத்தில் பிரபல நடிகர் சுஷாத் சிங் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, கன்னட நடிகை ஒருவர் மன சோர்வு காரணமாக உலகை விட்டு விடைபெறுகிறேன் என பதிவு ஒன்றை போட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

அவர் வேறு யாரும் இல்லை, கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகை ஜெயஸ்ரீ தான். இவர் கன்னட திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். 

மேலும் செய்திகள்: இரண்டு நாயகியை தூக்கி அடித்துவிட்டு... மீண்டும் அழகு ராட்சஷி ரக்ஷிதாவை அழைத்து வந்த விஜய் டிவி!
 

இவருடைய பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த, பிரபலங்கள் மற்றும் இவருடைய நண்பர்கள் சிலர் உடனடியாக இவருக்கு போன் செய்து பார்த்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் இவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அவரே, தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தது மட்டும் இன்றி, சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கினார்.

இதன் பின்னரே இவருடைய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் இவர் தற்கொலை முயற்சியை கையில் எடுத்து பின் காப்பாற்ற பட்டாரா? என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

மேலும் செய்திகள்: நடிகர் ஆர்யாவின் பிரமாண்ட வீடு... சாயீஷாவின் புகுந்த வீட்டை பார்க்கலாம் வாங்க!
 

தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கும், இவருக்கும் இடையே சொத்து காரணமாக பிரச்சனை இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன சோர்வால் இப்படி ஒரு முடிவை ஜெயஸ்ரீ எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.