பிரபல மாடல் சாக்ஷி அகர்வால், திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால். நடிகை நயன்தாரா மற்றும் ஆர்யா, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்த 'ராஜா ராணி' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து,  யோகன், திருட்டு விசிடி, போன்ற படங்களில் நடித்தார்.

மேலும், சொப்பன சுந்தரி என்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் நடுவராகவும் கலந்து கொண்டார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்த, 'காலா' திரைப்படம் இவரை ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தெரியப்படுத்திய திரைப்படம் எனலாம்.

இதைத்தொடர்ந்து, உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் அணைத்து போட்டியாளர்களை போலவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு, ரசிகர்கள் ஆர்மி உருவாக்கி கொண்டாடினர்.

பின் கவினை காதலிப்பதாக கூறினார். இவர் உண்மையாக காதலித்த நிலையில்... கவின் அந்தர் பல்டி அடித்தார். பின் மக்களிடம் ஓட்டுகள் குறைவாக பெற்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், அடுக்கடுக்காக  கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர், தற்போது... பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக, எங்கும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும், நடிகை சாக்ஷி அகர்வால், இன்று தன்னுடைய ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார்.

அப்போது பேசிய அவர், ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது... மேலும் நான்கு படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும், விரைவில் இரு பெரிய படங்களில தான் நடிக்க உள்ளதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சாக்ஷி இந்த இன்ஸ்டா லைஃவில் பேசியுள்ளார்.

அணைத்து ரசிகர்களையும் நேசிப்பதாவும், சிரித்து கொண்டே பேசிய சாக்ஷி, கவின், லொஸ்லியா பற்றிய கேள்விகள் எழுப்ப பட்டதற்கு பதிலளிக்காமல் சிரித்தே சமாளித்துவிட்டார்.