விஜய் டிவி தொலைக்காட்சியில் 2 சீசன்களை தொடர்ந்து, மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.  இன்று ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 6ஆம் தேதி வரை, அதாவது 100 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பல சினிமா பிரபலங்கள், மற்றும் மாடல்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  எனினும் உறுதியாக யார் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது இன்று இரவு 8 மணிக்கு தெரியவரும்.

பிக்பாஸ் வீட்டில்,  ஒவ்வொரு சீசனிலும் விதவிதமாக அலங்காரம் செய்து வரும் நிகழ்ச்சியாளர்கள்,  இந்த முறை வரலாற்று சிறப்புகளை எடுத்து கூறும் விதத்தில், தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கிராமங்களின் தோற்றத்தை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர்.

மேலும் நடிகர் விருமாண்டி படத்தில் தோன்றும்  கமலஹாசனின் ஓவியமும், ரஜினிகாந்தின் பேட்ட பட ஓவியமும் வரையப்பட்டிருந்ததாக,   தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ரஜினிகாந்தின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் ரஜினிகாந்த் புகை பிடிப்பது போல் இந்த ஓவியம் இருந்ததாகவும், இதனால் இந்த ஓவியத்தை நிகழ்ச்சியாளர்கள் நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.