பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் சேரன், தற்போது ரகசிய அறையில் இருந்து, போட்டியாளர்கள் செய்து வரும் ஒவ்வொரு விஷயங்களையும் கேட்டு கொண்டும், ரகசிய கேமரா மூலம் பார்த்து கொண்டும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இது ஒரு புறம் இருக்க, இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் இருந்து... இந்த வரைக்கு அனைத்து போட்டியாளர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் வகையில், பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மூலம், 80 நாட்களுக்கு மேலாக தங்களுடைய குடும்பத்தினரை பார்க்காமல் இருக்கும் போட்டியாளர்கள், இந்த டாஸ்க் மூலம் பார்க்க முடியும். இந்த டாஸ்க் லக்சுரி பட்ஜெட் டாஸ்காக இருந்தாலும், போட்டியாளர்கள் பெற்றோர்கள், மற்றும் உறவினர்களை பார்த்த உச்சகத்தில், டாஸ்கை தகர்த்து உற்சாகமாக அவர்களை கட்டி பிடித்து, தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். 

இந்நிலையில், இன்று நடக்கும் பிரீஸ் டாஸ்கில், முகேனின் தாயார் உள்ளே வருகிறார். அம்மாவை பார்த்ததும், உற்சாகத்தில் துள்ளி குதித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவர்க்கு மற்றொரு சர்பிரைசாக அவருடைய தங்கையும் உள்ளே வர, அவரையும் தூக்கி கொஞ்சி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். தங்கையை பார்த்ததும் அம்மாவை தனியாக விட்டு விட்டு தங்கையை முகேன் உள்ளே கொண்டு செல்கிறார். இந்த காட்சி தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு மாற்றமா?