பிக்பாஸ் வீட்டில், எதுக்கெடுத்தாலும் ஒவ்வொரு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில், கவின் - லாஸ்லியாவுடன் அமர்ந்து சாப்பிட்டது தொடர்பாக புதிய பிரச்சனை ஒன்றை கிளப்பினார் சாக்ஷி. 

இந்த சம்பவத்தை வைத்து, இந்த பிரச்சனையில் துளியும் சம்மந்தம் இல்லாத மதுவும், மீராவும் குறும்படம் போட வேண்டும் என்கிற லெவலுக்கு நேற்றைய தினம் சண்டை போட்டு கொண்டனர். 

நடிகர் சரவணன் அனைவருடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, கவின் - லாஸ்லியாவிற்கு சாப்பாடு ஊட்டிய விஷயத்தால் சாக்ஷி கோபமாக இருப்பதாக தெரிவித்தது மீரா என கூறுகிறார் மது. இதற்கு மீரா நான் அப்படி சொல்லவே இல்லை, நான் உன்கிட்ட பேசியே ஒரு வாரம் ஆகுது நீ புதுசா சீன் கிரியேட் பண்ணுற என்பது போல் இதை ஒரு குறையாக அனைவரிடமும் கூறுகிறார்.

இவர்களின் சண்டையை சமாதானம் செய்ய, அப்படியே சொன்னால் என்ன, நீ பேசி இருந்தால் கண்டிப்பா வீடியோ இருக்கும் என கூறுகிறார் சரவணன். மதுவும் அப்போ கண்டிப்பா இந்த வாரம் குறும்படம் இருக்கு என கூறுகிறார்.

இந்த பிரச்சனைக்கும் சற்றும் சம்மந்தம் இல்லாத இவர்களின் பிரச்சனை தற்போது குறும்படம் போடும் அளவிற்கு சண்டையாக மாறியுள்ளது. இது எங்க போய் முடிய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.