‘எங்களுக்கு அழைப்பே இல்லாதபோது, நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ளாத நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதாக ஒரு செய்தியை விஜய் டி.வியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அவர்கள் இதற்கு தக்க பதில் சொல்லியே ஆகவேண்டும்’என்று நடிகை மதுமிதாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களாக 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.  நடன இயக்குநர் சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.இந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைகளில் சிக்கிய மதுமிதாவும் சித்தப்பு சரவணனும் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் மதுமிதா கணவர் கலந்து கொண்டது போன்ற வீடியோ வைரலாகி வந்தது. இந்நிலையில், பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதுபோல் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக மதுமிதாவின் கணவர் மோசஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,... என் குடும்பத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இறுதி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இது மிகத்தவறு. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார்.‘எங்களுக்கு அழைப்பே இல்லாதபோது, நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ளாத நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதாக ஒரு செய்தியை விஜய் டி.வியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அவர்கள் இதற்கு தக்க பதில் சொல்லியே ஆகவேண்டும்’என்று நடிகை மதுமிதாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களாக 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். நடன இயக்குநர் சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.இந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைகளில் சிக்கிய மதுமிதாவும் சித்தப்பு சரவணனும் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் மதுமிதா கணவர் கலந்து கொண்டது போன்ற வீடியோ வைரலாகி வந்தது. இந்நிலையில், பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதுபோல் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக மதுமிதாவின் கணவர் மோசஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,... என் குடும்பத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இறுதி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இது மிகத்தவறு. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார்.‘எங்களுக்கு அழைப்பே இல்லாதபோது, நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ளாத நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதாக ஒரு செய்தியை விஜய் டி.வியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அவர்கள் இதற்கு தக்க பதில் சொல்லியே ஆகவேண்டும்’என்று நடிகை மதுமிதாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களாக 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். நடன இயக்குநர் சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.இந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைகளில் சிக்கிய மதுமிதாவும் சித்தப்பு சரவணனும் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் மதுமிதா கணவர் கலந்து கொண்டது போன்ற வீடியோ வைரலாகி வந்தது. இந்நிலையில், பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதுபோல் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக மதுமிதாவின் கணவர் மோசஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,... என் குடும்பத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இறுதி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இது மிகத்தவறு. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார்.