பிக்பாஸ் நிகழச்சியின் ஒவ்வொரு சீசனிலும் புகை பிடிப்பதற்கு என்று போட்டியாளர்களுக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருக்கும்.  கடந்த இரண்டு சீசனிலும், இந்த அறையின் பக்கம் போட்டியாளர்கள் யாரவது சென்றால் கூட அது தெரியாது.

ஆனால் இந்த சீசனை பொறுத்தவரை சற்று வித்தியாசமாகவே உள்ளது எனக் கூறலாம்.  அதாவது ஸ்மோக்கிங் ரூமில் யார் இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ரூம்மை ஆண்களை விட மிகவும் அதிகமாக பயன்படுத்துபவர்கள் பெண்கள் தான்.

குறிப்பாக சாக்ஷி, வனிதா, ஷெரின், அபிராமி ஆகியோர்தான் உபயோகிக்கின்றனர்.  ஆண் போட்டியாளர்கள் இந்த அரை அருகே வருவது இல்லையா? அல்லது அந்த காட்சி நமக்கு காட்ட படுவது இல்லையா என்பது தெரியவில்லை. 

இப்போது என்ன பிரச்சனை என்று பார்த்தல், பெண்கள் புகைப்பிடிப்பதை இன்னும் நாம் சமூக ஏற்றுக்கொள்ளாமல், அதை தவறாக கருதும் நிலையில்,  இந்த நான்கு பேரில் ஒருவர் புகைப்பிடிக்கும் காட்சி எந்த ஒரு எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் ஒளிபரப்பப்பட்டது.  இதனால் இந்த நிகழ்ச்சியின் பார்க்கும் பார்வையாளர்கள்,  குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால், இது போன்ற காட்சியை தவிக்க வேண்டும் என தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.