பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த கவினின் செயல், விளையாட்டாக இருந்தாலும். இதனை சீரியஸாக சில பெண் போட்டியாளர்கள் எடுத்து கொண்டதால் அது விபரீதமாக அமைத்துள்ளது.

தன்னுடைய தவறை புரிந்து கொண்ட கவின், சிலரது உணர்ச்சிகளில் விளையாட கூடாது என தெரிந்து, லாஸ்லியா மற்றும் சாக்ஷியிடம் மாறி மாறி மன்னிப்பு கேட்டார். இருவருமே கவின் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், அவருடைய மனதை மேலும் கஷ்டப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். என்பது முதல் இரண்டு புரோமோ மூலம் தெரியவந்தது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், "நான் எதோ ட்ரை பண்ணுனேன். அது எங்கயோ போய் முடிஞ்சிடுச்சி. என் தப்பு என்னனு இப்போ தெரியுது. இந்த வீட்டுல எல்லோர் கிட்டயும் நான் எப்படி பழகி இருக்கேன். நேற்று நைட்லேந்து வேறு விதமா பார்க்கும் படி ஆகிவிட்டது என கூறி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். 

பின் பாத்ரூம் நோக்கி இவர் செல்லும் காட்சி காட்டப்படுகிறது. அங்கு கதவை மூடி கொண்டு கவின் கதறி அழும் சத்தம் கேட்கிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஒருவித கோபமான முகத்தை தன் மீது காட்டுவதால், இங்கிருந்து வெளியேறும் முடிவை கவின் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.