ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தொகுப்பாளர், நடிகை என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வர நினைத்தவர் ஜூலி. ஆனால் இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் தற்போது காதலன் இப்ரானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

தற்போது, ஜூலியின் காதலன் போலீசாரை தாக்கியதாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேப்பேரி காவலர் பூபதி, அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது... "நடிகை ஜூலியின் கார் போலீஸ் ஜீப் மீது மோதியது. இதனை தட்டி கேட்க போன காவலர்களை, ஜூலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான்,  தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல்  போலீசை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரில் பேரில் தற்போது ஜூலியின் காதலர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.