பிக்பாஸ் வீட்டில், என்ன நடக்கிறது என்பதை எப்போதும், அகம் டிவி வழியாக கண்காணிக்கும் கமல், தற்போது பிகபாஸ் போட்டியாளர்களை கவனிக்க மற்றொரு வழியை காட்டியுள்ளார்.

 

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஒரு திரையை விளக்கி யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதை அருகில் இருந்தே கவனிக்கிறார்.

அப்போது மும்தாஜ் தயாராகி வருவதாகவும், டேனி சமைத்து கொண்டு இருப்பதாகவும், மகத் இப்போது தான் எழுந்து வெளியே வருவதாகவும் கூறுகிறார்.

பின் மிகவும் சைலன்ட்டாக அகம் டிவி யில் இருந்து பார்த்ததை விட இது மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும், இப்படி பார்ப்பதை விட, அங்கிருந்து பார்ப்பது தான் மிகவும் பிடித்திருப்பதாகவும் வாங்க அங்கேயே போய் விடலாம் என கூறுகிறார். 

இதில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்களை கவனிக்க இப்படி ஒரு வழி உள்ளது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.