bigboss harthi admited in hospital

சிறு வயதில் இருந்து சின்னத்திரை முதல் வெள்ளிதிரை வரை கலக்கியவர் நடிகை ஆர்த்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு சில விமர்சனங்களை சந்தித்தார். எனினும் இவருடைய காமெடிகளை தற்போது வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

இவர் தற்போது திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்துவதை விட , சின்னத்திரை நிகழ்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும் ஸ்டார் வார்ஸ் என்கிற சகச நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு காலில் Ligament Tear ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் ஆர்த்தி காலில் கட்டுப் போட்டுள்ளதை புகைப்படமாக எடுத்து அதை தன்னுடைய ட்விட்டர் பகுதியில் ஷேர் செய்துள்ளார்.

Scroll to load tweet…