பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில், போட்டியாளர்களுக்கு புதிதாக டாஸ்க் கொடுக்கவில்லை என்றாலும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலைவலியை கொடுக்கும் நோக்கில், பிக்பாஸ்  முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி, வையாபுரி ஆகியோர்  பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர். 

இவர்களுடன், தற்போது பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவும் இணைந்துள்ளார்.

இதன் மூலம் மீண்டும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் ஆறு பேர் ஒன்றாக இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களுக்குள் சண்டை வெடித்துள்ளது. 

திடீர் என சுஜா வருணி, சிநேகனிடம் வந்து ஏன் ஆரவுடன் சரியாக பேசவில்லை என கேட்கிறார். இதற்கு சிநேகன் ஆரவ் தன்னை அவாய்டு செய்தது போல் இருந்ததால் வெளியில் வந்ததாகவும். தான் எப்போதுமே ஆரவை விட்டு கொடுத்து இல்லை என கூறுகிறார்.

இதற்கு சுஜா நீங்கள் திடீர் என வெளியே எழுந்து வர காரணம் என்ன என கேள்வி எழுப்புகிறார். இதற்கு சிநேகன் நானா விலகி போகவில்லை... விலகி போகிறவரிடம் நான் போய் கெஞ்ச முடியாது என சும்மா இருக்கும் ஆரவை வம்புக்கு இழுக்கிறார். இதில் இறுதி பிக்பாஸ் 2 பிரபலங்களுக்கு மத்தியில் சண்டை வெடிக்கிறதோ இல்லையோ... பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களால் கலை கட்ட போகிறது நிகழ்ச்சி என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.