Asianet News Tamil

இளைத்து எலும்பும் தோலுமாக மாறிய பிக்பாஸ் நடிகை... படுமோசமான தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி...!

அப்படி ஹாட் கிளிக்ஸை பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்த ரைசா, தற்போது பதிவேற்றியுள்ள புகைப்படம் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 

Bigboss Fame Raiza Wilson Over Slim Shocking Photo Going Viral
Author
Chennai, First Published May 4, 2020, 5:03 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார்.லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு படத்திலும் ஜோடி சேர்ந்ததால், ஹரிஷ் கல்யாண், ரைசா இடையே காதல் தீ பற்றி இருப்பதாக வதந்தி கொளுந்துவிட்டு எரிகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. 

இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!

தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கலக்கலான ஹாட் போட்டோஸை தட்டிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.தற்போது நிலவும் இந்த லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, மலரும் நினைவுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். சிலரோ தங்களது ஹாட் போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை கிளு கிளுப்பாகி வருகின்றனர். 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

அப்படி ஹாட் கிளிக்ஸை பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்த ரைசா, தற்போது பதிவேற்றியுள்ள புகைப்படம் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. லைட் புளூ கலர் ஸ்லீவ் லெஸ் கவுனில் நச்சுன்னு போஸ் கொடுத்திருக்கிறார் ரைசா. அந்த உடையில் மிகவும் இளைத்து எலும்பும் தோலுமாக இருக்கும் ரைசாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரைசாவின் அந்த பரிதாபமான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Happy Throwback 😻. @vicky5d 👏🏼

A post shared by Raiza Wilson (@raizawilson) on May 2, 2020 at 2:00am PDT

Follow Us:
Download App:
  • android
  • ios