முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார்.லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. 

இதையும் படிங்க: விரட்டிய கொரோனா... ஐதராபாத் டூ சென்னை.... 600 கி.மீ. பைக்கில் பயணம் செய்த அஜித்?

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: “நாயகி” சீரியல் நடிகை வித்யாவா இது?... குட்டை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக கொடுத்த ஹாட் போஸ்...!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு படத்திலும் ஜோடி சேர்ந்ததால், ஹரிஷ் கல்யாண், ரைசா இடையே காதல் தீ பற்றி இருப்பதாக வதந்தி கொளுந்துவிட்டு எரிகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை, மாறாக ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் போகட்டுமா? என்று தமிழக ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார் ரைசா. மேலும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கலக்கலான ஹாட் போட்டோஸை தட்டிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

தற்போது நிலவும் இந்த லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, மலரும் நினைவுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி ரைசா வில்சன் முதன் முறையாக தனது பெற்றோரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது பெற்றோர் திருமணமான புதிதில் எடுத்துக்கொண்ட போட்டோ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

புதுமண தம்பதியாக இருந்த ரைசா பெற்றோரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். உங்க அம்மா, அப்பா பார்க்க ரொம்ப நல்ல பெற்றோராக இருக்கிறார்கள், இப்ப தெரியுது நீங்க எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று என ரைசாவை சகட்டுமேனிக்கு பாராட்டித் தள்ளுகின்றனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த அழகிய புகைப்படம் எக்கச்சக்க லைக்குகளையும் அள்ளி வருகிறது.