இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "பிக்பாஸ்" நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். சாக்‌ஷி உடன் கடலை போட்டுக் கொண்டிருந்த கவினை, வளைத்து வளைத்து பேசி வலையில் விழ வைத்தார் லாஸ்லியா. உருகி, உருகி காதலித்த கவின், லாஸ்லியாவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் ஆர்மிகளையும், ஃபேன் கிளப்புகளையும் ஆரம்பித்து தூள் கிளப்பினர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த லாஸ்லியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்களது காதல் குளத்தில் விழுந்த முதல் கல்லே, தடைக்கல்லாகவும் மாறிப்போனது. அதன் பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இருவரும் இதுவரை ஒருவரை, ஒருவர் சந்திக்கவில்லை. 

இந்நிலையில் லாஸ்லியா தனது கலர், கலர் புகைப்படங்களையும், ரசிகர்களுடன் எடுக்கும் செல்ஃபியையும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். ஆண் நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை பார்க்கும் கவின் ரசிகர்கள், கொதித்து போய் என்ன கேள்வி கேட்டாலும் லாஸ்லியா வாய் திறப்பது இல்லை. மேலும் கவின், லாஸ்லியா காதல் குறித்தும் எவ்வித அப்டேட்டும் தெரியாமல் ஆர்மிக்கள் திக்குமுக்காடி போயுள்ளது. 

"

இதனிடையே, சமீபத்தில் தனது ஆண், பெண் நண்பர்களுடன் லாஸ்லியா நீச்சல் குளத்தில் செம்ம ஆட்டம் போடும் வீடியோவை, சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் லாஸ்லியா செம்ம குறும்பு செய்யும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வரைலாகி வருகிறது. அதனைப் பார்த்த கவின் ஆர்மி, மீனாட்சி, மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சுன்னு புலம்பி வருகின்றனர். மேலும் சிலரே கவின் அண்ணா இதையெல்லாம் பார்த்தா கஷ்டப்பட மாட்டாரா, இப்படியெல்லாம் பண்ணாதீங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர்.