பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும், திரைப்பட வாய்ப்புகள், தேடி வந்த வண்ணம் உள்ளது.

அதிலும் குறிப்பாக சிறு சிறு விளம்பரங்களில் மாடலாக வலம் வந்துக்கொண்டிருந்த தர்ஷனுக்கு, பிக்பாஸ் மேடையிலேயே அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள படத்தில், கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் நடிகர் கமலஹாசன்.

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் தர்ஷனின் உறவினர் ஒருவர்... தற்போது வரை தர்ஷன் யாரையும் காதலிக்க வில்லை என்றும், அவர் சிங்கிள் என கூறியதான ஒரு தகவல் வைரலாக , தர்ஷன் சனம் ஷெட்டி மீது உள்ள காதலை உறுதி படுத்தும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக காதலி சனம் ஷெட்டியுடன் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வேறு எங்கும் இல்லை பாஸ்... இயக்குனர் சேரன் நடிப்பில், இந்த வாரம் வெளியாக உள்ள 'ராஜாவுக்கு செக்' படத்தின் பிரிவியூ ஷோ, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிள் நடந்தது. அதனை காண, தன்னுடைய காதலியுடன் சென்றுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.