உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம், பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன். பிக்பாஸ் டைட்டில் வெல்வதற்கான அணைந்து தகுதிகளும் இருந்தும், ஒரு சில விஷயங்களில் மெச்சூரிட்டி இல்லாமல் விளையாடியதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவரால் பிக்பாஸ் டைட்டில் வெல்லமுடியாவிட்டாலும், பிக்பாஸ் வெற்றி விழா மேடையிலேயே, கமலஹாசன் அடுத்ததாக அவருடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடிப்பார் என கூறி, அதற்கான ஒப்பந்த பாத்திரத்தையும் அவர் கையில் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் தற்போது, கமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2  படத்திலும் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து ஒரு வருடம் ஆகும் நிலையில் இது வரை தர்ஷன் நடிப்பில் ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது முதல் முறையாக  தற்போது தர்ஷன் ஒரு மியூசிக் ஆல்பத்தின் நடித்துள்ளார். 

’தாய்க்கு பின் தாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் தர்ஷன் உடன் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். காதல், ரொமான்டிக், சோகம் என அனைத்தும் கலந்து உருவாகியுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆல்பம் சித்ஸ்ரீராம், மற்றும் தரண் குமார் இசையில் உருவாகியுள்ளது.

இந்த ஆல்பத்தில் நடித்ததால் தனது கனவு நனவாகியுள்ளதாகவும், தனது சமூக வலைத்தளத்தில் தர்ஷன் நேற்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த டீசர் இதோ...