பிக்பாஸ் இல்லத்தில் பிரச்சினைகளைக் கிளப்புவதற்கென்றே மீண்டும் உள்ளே கொண்டுவரப்பட்ட வனிதா வந்ததும் வராததுமாய் தனது நாரதர் வேலையைத் துவங்கி நடிகை ஷெரினைக் கதறி அழவைத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 இன்று 100 வது நாளை நிறைவு செய்தாலும் வெற்றியாளர் யார்? என்பது 105 வதுநாளான  வரும் ஞாயிற்றுக்கிழமை தான் தெரியும். இதற்கிடையே, பழைய போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வனிதா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். வனிதா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாலே ஏதோ பரபரப்பு காத்திருக்கிறது என்பது நிச்சயம். அதேபோல், அவர் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டை ரணகளப்படுத்தத் துவங்கியுள்ளார்.

 அதாவது, இன்று சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட 101 வது நாள் புரோமோவில்  தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ஷெரீனின் காதல் தான் காரணம், என்று அவர் கூறுகிறார். அத்தோடு நில்லாமல், ’நான் முந்தியே சொன்னப்ப யாரும் ஒத்துக்கலை. அடுத்த ரெண்டு வாரத்துல அதுக்கான ரிசல்ட் வந்துருச்சி உன்னை லவ் பண்ணுனதுனாலதான் அவர் வெளியே அனுப்பப்பட்டார்’என்று ஷெரினை முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டவே ஷெரின் ஆத்திரம் தாங்காமல் அழுகிறார்.
 
வனிதாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஷெரின் ‘நான் தான் ரீசன்னு சொல்லலாமா? என்று அழுகிறார்.ஆனால் நடிகை சாக்‌ஷியோ ‘நீ எதை ஆதாரமா வச்சி அப்பிடி சொல்றே? நீ சொல்றதை ஏத்துக்க முடியாது என்று வனிதாவுடன் மல்லுக்கட்ட முயல்கிறார். ஸோ ...மீதமுள்ள 5 நாட்களில் வனிதாவி புண்ணியத்தால் பிக்பாஸ் இல்லத்தில் அடிதடிகளுக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.