பிக்பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளில் இன்னொரு காதல் ஜோடி கையும் களவுமாக மாட்டியிருக்கிறது. தனக்கு தரப்பட்ட டாஸ்க் ஒன்றுக்காக தர்ஷனுக்கு ‘மானே தேனே’ என்று கடிதம் எழுதிய ஷெரின் அதை சம்பந்தப்பட்டவரிடம் நேரில் கொடுக்கவேண்டும் என்றவுடன் அநியாயத்துக்கு வெட்கப்பட்டு அதை கிழித்துப்போட்டார்.

இன்னும் ஒரு வாரத்தில் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இன்று யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றனர் . போட்டியாளர்கள் அவர்கள்  இருவரையும்  ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்று உள்ள நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் மகத், யாஷிகா இருவரும் ஷெரினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கின்றனர். அதில் உங்களுக்கு பிடித்த யாராவது ஒருவருக்கு ஒரு லெட்டர் எழுத வேண்டும். அந்த லெட்டர்  மிகவும் ரகசியமாகக் காக்கப்படும். சம்பந்தப்பட்டவரிடம் கொண்டுபோய் கொடுக்கப்பட மாட்டாது, அதேபோல் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட மாட்டாது. நீங்கள் உங்கள் மனதில் உள்ளவற்றை அந்த லெட்டரில் தாராளமாக எழுதலாம் என்று கூறுகின்றனர். 

அதனை  நம்பிய ஷெரின் தனியே உட்கார்ந்து காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில்,... You are my Sunshine on a Cloudy day. Ther is so much I want to say You light up the Darkest parts of me...என்று அவர் தொடங்க, குறுக்கே புகும் பிக்பாஸ் ‘இந்த  கடிதத்தை எழுதி முடித்த பின்னர்  யாஷிகா மற்றும் மகத் நீங்க ரெண்டு பேரும் ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினாரோ அவருக்கு கொடுத்துடுங்க...என்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷெரின், பயங்கரமாக வெட்கப்பட்டுக்கொண்டே வேகமாக ஓடிப்போய் அந்த லெட்டரை சுக்குநூறாய் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்.கடந்த சில நாட்களாகவே ஷெரின், தர்ஷன் மீது மிகுந்த கரிசனத்தோடு நடந்துகொள்வதால் அந்தக் காதல் கடிதத்தை அவருக்குத்தான் எழுதியிருப்பார் என்று நம்பப்படுகிறது.