அறிமுகம்:

நடிகர் தனுஷ் நடித்து 2007-ம் ஆண்டு வெளியான, 'பொல்லாதவன்' திரைப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் நடிகர் டேனியல். 

இவர் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் பேசிய ஒற்றை வசனம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ். 

குவிந்த வாய்ப்புகள்:

டேனியலுக்கு இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக 'மாஸ்', 'மரகத நாணயம்', 'ரங்கூன்', ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது. மேலும் இவருடைய நடிப்பில் விரைவில் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' , 'சின்னா', 'ஜருகண்டி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது .

பிக்பாஸ்:

ரசிகர்கள் மத்தியில் டேனியல் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தாலும். இவரால் முன்னணி நடிகர்கள் படங்களில் இன்னும் இடம்பெற முடியவில்லை. எனவே தற்போது இவரை மேலும் பிரபலப்படுத்திக்கொள்ள தற்போது பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இவர் நேர்மையாக விளையாடி வருவதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. 

டானியல் காதலி:

இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் டேனியல் காதலி யார் என்பது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  இவருடைய பெயர் தனிஷா என்றும் இவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே நண்பர்களாக பழகி, பின் காதலர்களாக வருவதாகவும் கூறப்படுகிறது. 

அவரின் புகைப்படம் இதோ...