பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்க நெருங்க, எதிர்ப்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.  நேற்றைய தினம் பலரது ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மும்தாஜ் எலிமினேட் செய்யப்பட்டார். 

ஆனால் இந்த எலிமினேஷன் தற்போது வரை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. காரணம் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள், மக்களின் கருத்துக்கு எதிர்மாறாக பிக்பாஸ் செயல்படுவதாக பலர் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஐஸ்வர்யாவுக்கு வில்லியாக மாறியுள்ளார் விஜி, அதே போல் ரித்விகா செய்யும் செயலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்கள் செய்வதை வைத்து பார்த்தால், பிக்பாஸ் இந்த முறை வித்தியாசமான ஒரு டாஸ்க் கொடுப்பதாக தெரிகிறது. "இந்த ப்ரோமோவில் விஜி , அணியில் ஒருவர் நியாயமாக இல்லை என்றால் அவரக்ளுக்கு புரிய வையுங்கள் என கூறுகிறார். பின் ஒருவருடைய பலவீனத்தை அறிந்து அதனை தகர்க்க வேண்டும் என தன்னுடைய அணியிடம் கூறுகிறார்.

இந்த டாஸ்கில் அதிக பாயிட்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக, யாஷிகாவின் புடவையை நறுக்குகிறார் விஜி. ரித்விகா யாஷிகாவின் மூக்கின் அருகே மிளகு பொடியை தூவுகிறார். 

யாஷிகா தவறு செய்தால் கூட பரவாயில்லை. ஆனால், பாயிண்ட்ஸ் வேண்டும் என கூறி, இவர்கள் இப்படி செய்வது ரசிகர்களை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் விஜி யாஷிகாவின் புடவையை நறுக்கியுள்ளது மிகவும் கண்டிக்க தக்கது என கூறிவருகிறார்கள்.