மாற்றத்தை நோக்கி "குச்சி ஐஸ்"..! அடுத்த அவதாரம் எடுத்த பிக்பாஸ் பரணி...! 

மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது குச்சி ஐஸ் திரைப்படம்.

பிக்பாஸ் பரணி நடித்து வெளியாக உள்ள இந்தப் படத்தில் பரணிக்கு ஜோடியாக லத்திகா நடித்துள்ளார். ஜெயபாலன் தயாரிப்பில், தோஷ் நந்தா இசையில், பழனிஸ் ஒளிப்பதிவில் வெளியாக உள்ள இந்த படத்தில் முழுக்க முழுக்க உலகமயமாதல், இயற்கை சூழலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு காட்சிகள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குச்சி ஐஸ் என படத்தின் பெயரிலேயே ஒரு மேக்னெட்டை வைத்துள்ள இந்த டீம், தற்போது 50 சதவீத படப்பிடிப்பை ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் எடுத்து முடித்துள்ளனர். மிக அற்புதமாக வெளிவந்துள்ள இந்த பட காட்சிகள் நடிகர் விஜய் சேதுபதியையும் ஈர்த்துள்ளது. குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய்சேதுபதி.

இதுகுறித்து நடிகர் பரணியை தொடர்பு கொண்டு பேசியபோது, "குச்சி ஐஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும்... உலகமயமாதல் மற்றும் இயற்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது.. மக்கள் ஆதரவுடன் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்த படம் எடுத்து வருகிறோம்" என தெரிவித்தார்.

 

இதற்கு முன்னதாக நாடோடிகள் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பரணி. இதற்கிடைப்பட்ட நேரத்தில் குச்சி ஐஸ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பரணிக்கு நாடோடிகள் மற்றும் குச்சி ஐஸ் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.