Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் - 3 நிகழ்ச்சிக்கு தடையா..? ஒளிபரப்பு ஆகுமா? ஆகாதா..?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

bigboss 3 will telecast or not
Author
Chennai, First Published Jun 18, 2019, 7:55 PM IST

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் படி, பிக் பாஸ் நிகழ்ச்சி தணிக்கை செய்யாமல், அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது  என உயர் நீதிமன்றத்தில் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள், பார்வையாளர்களை பாதிக்கும் வகையில் கவர்ச்சி உடை இரட்டை அர்த்த வசனம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bigboss 3 will telecast or not

ஐபிஎஸ் தணிக்கை சான்றிதழ் பெறாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பக் கூடாது என மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசு, காவல் ஆணையர், கமல்ஹாசன், தொலைக்காட்சி நிறுவனம் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தாக்கல் செய்த இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே பிக்பாஸ்  நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்து விவரமாக தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios