bigboss 2 soon in tamil nadu

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கரமாக முடிந்தது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் பெரும் அளவில் பிரபலமாகி,இன்று கொடி கட்டி பறக்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சி 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.சீசன் 1 பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், வையாபுரி, சிநேகன், ஆரவ் ஓவியா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 2 தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

மேலும்,நேற்று அறிமுகமான கலர்ஸ் தொலைக்காட்சியில்,"எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி போன்றே,நடிகர் ஆர்யா நடத்தும் இந்த நிகழ்ச்சியும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

காரணம், இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.