Big Pass - actress Anuya Lamentation
மற்றவர்களை துன்பப்படுத்தி அதை காண்பதில் ரசிகர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சித்தான் பிக் பாஸ் என்று அதிலிருந்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்ட நடிகை அனுயா புலம்பியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டவர் நடிகை அனுயா. இவர் முதல் வாரத்திலேயே அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷத்தில் உள்ள அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், பிரபலங்களுக்குள் நடக்கும் முட்டாள்தனமான சிறு சண்டைகூட ரசிகர்களுக்கு ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் தான் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ரசிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி உண்மையை சொல்ல போனால் இது ஒரு சாடிஸ்ட் நிகழ்ச்சி என்றும், மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது போல் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது இதனையும் மக்கள் பரவலாக ரசித்துக்கொண்டிருக்கின்றனர், இதன் காரணமாக தான் இந்த நிகழ்ச்சி பிற மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என அனுயா மிகவும் வருத்ததோடு தெரிவித்துள்ளார்.
