big boss2 teaser release
கடந்த ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி, தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது அரசியலில் கால் பதித்துள்ள கமல், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கலாம் என்கிற எண்ணத்தில் தான் பிக் பாஸ்2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை உறுதி படுத்தும் விதத்தில், விரைவில் ஆரம்பமாக உள்ள பிக்பாஸ்-2 வின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் கம்பீரமாக மிகப்பெரிய மீசையுடன் கமல் ஒரே ஒரு சொடக்கு போட்டு சிரிப்பது போல் உள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாட உள்ள போட்டியாளர்களின் தேர்வும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஜூன் 25 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
