பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், முதல் சீசன் அளவிற்கு விறுவிறுப்பாக இல்லா விட்டாலும், தவறாமல் ரசிகர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம், பிரபல ஆர்.ஜேவும், நடிகையுமான மமதி சாரி முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் வரும் நாட்களில் இந்த நிகழ்ச்சியின் பல பிரச்சனைகள் வெடிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில், தற்போது இரண்டு நெருங்கிய தோழிகளுக்குள் சண்டை வெடித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானத்தில் இருந்து, நெருங்கிய தோழிகளாக சுற்றி திரிந்தவர்கள் யாஷிகா மற்றும் நடிகை ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் சேர்த்து செய்யும் குறும்புகளும் பல ரசிகர்களை ரசிக்க வைத்தது. 

தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் மஹத் யாஷிகாவின் கையை பிடித்து எதோ சமாதானம் செய்கிறார். இதற்கு யாஷிகா தனக்கு சிம்பத்தி உருவாகுவது பிடிக்காது என கூறுகிறார். இதற்கு மஹத் யார் சிம்பத்தி உருவாக்கியது என கேள்வி எழுப்புகிறார்.

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா பேசும் காட்சி காட்டப்படுகிறது. அதில் யாஷிகாவிடம் நீ ரொம்ப நேச்சுரல், ஆன நான் முட்டாள் இல்லை என கூறி கோவமாக பேசுகிறார் ஐஸ். பின் மஹத் யாஷிகாவிற்கு சப்போர்ட் செய்கிறார். 

இதைதொடர்ந்து ,ஐஸ்வர்யா எல்லோரும் என்னை தான் நாமினேட் செய்ய வேண்டும் என கூறி வெளியேர உள்ளது போல் கூறுகிறார். ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள்..? இவர்களுக்குள் என்ன பிரச்சனை என இன்று தெரியவரும்.