பிக்பாஸ் பிரபலம் வனிதாவிற்கும் அவரது அப்பா விஜயகுமார் மற்றும் சகோதரர் அருண்விஜய், சகோதரிகள் இடையே பிரச்சனை இருப்பது ஊர் அறிந்த செய்தி. இந்நிலையில் பிரபல நடிகரான அருண்விஜய் தனது 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். காலை முதலே அருண்விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் சகோதரர் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் "கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நீங்களும், நானும் ஒன்றாகத் தான் நமது வாழ்க்கையைத் தொடங்கினோம். நமது குடும்பத்தை நாம் பெருமையடைச் செய்ய வேண்டும். நமக்குள் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ஐ லவ் யூ" என  பாசமழை பொழிந்துள்ளார். 

இதைப்பார்த்த வனிதா ரசிகர்கள் "நீங்க கோபக்காரியா இருந்தாலும் சூப்பர் அக்கா" என பதிவிட்டுள்ளனர். சிலர் "அருண்விஜய் அண்ணா, வனிதா அக்காவை மன்னிச்சிடுங்க அவங்க ரொம்ப நல்லவங்க" என கோரிக்கைவிடுத்துள்ளனர். "விடுங்க அக்கா குடும்பம்னா சண்டை இருக்கத் தான் செய்யும்" என வனிதாவிற்கு சமாதானம்  கூறியுள்ளனர்.