பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தனது பெற்றோரின் திருமண நாளான 27ம் தேதி அன்று பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். கொரோனா லாக்டவுன் காரணமாக விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலை வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக கரம் பிடித்தார். திருமணத்தின் போது வனிதாவும், பீட்டர் பாலும் லிப்லாக் கொடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. பலரும் 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதை விமர்சித்தாலும், அவருடைய மகள்கள், ரசிகர்கள் என பெரும்பாலானோர் வனிதாவின் இந்த முடிவுக்கு துணை நின்றனர். 

திருமணமான அடுத்த நாளே வனிதா வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. பீட்டரின் முதல் மனைவி ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலும் தானும் பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் குற்றச்சாட்டினார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீட்டர் பால் தன்னை திருமணம் செய்து கொண்டது ஹெலனுக்கு தெரியும் என்றும், தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் வனிதா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  

 

இதையும் படிங்க: ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை?... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...!

இந்நிலையில் வனிதாவின் 3வது திருமண விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் , “இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார். 

மேலும் பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து வந்தவர். அவற்றை வெளிப்படையாக பேசியவர். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என நினைத்தேன். அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த பிரச்சனையை அவர் கவனிக்காமல் விட்டது வருத்தமளிக்கிறது என்றும் மற்றொரு பதிவை ட்வீட் செய்திருந்தார். 

இதையும் படிங்க:  பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.