கமல்ஹாசன் (KamalHassan) தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ்(Biggboss Seasson 5) நிகழ்ச்சி சற்று முன்னர் துவங்கிய நிலையில், முதல் போட்டியாளராக கானா பாடகி இசை வாணி (Isai Vani) பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகியுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று முன்னர் துவங்கிய நிலையில், முதல் போட்டியாளராக கானா பாடகி இசை வாணி பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்கும் என எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக சற்று முன்னர், சரியாக கமல்ஹாசனின் அசத்தல் என்ட்ரியோடு துவங்கியது. முன்பு போல் தனித்தனியாக பிக்பாஸ் வீட்டு பகுதிகள் பற்றி தெரிவிக்காமல் அதையும் ஒரு புரோமோ போலவே காட்டப்பட்டது.

பின்னர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பின்னர், பிக்பாஸ் போட்டியாளர் முதல் போட்டியாளரின் என்ட்ரி துவங்கியது. ஆரம்பமே அசத்தலாக, காண இசை பாடகியான இசை வாணி தன்னுடைய அசத்தல் என்ட்ரியை காந்தக்குரலில் சிறப்பான பாடலோடு துவங்கி வைத்தார்.

பின்னர் கமல்ஹாசனிடம் பேசிய போது இந்த நிலைக்கு உயர்ந்தது குறித்தும், தன்னுடைய அப்பா மூலம் தான் கானா பாடல் துவங்கும் ஆர்வம் தனக்குள் ஏற்பட்டதாக பகிர்ந்து கொண்டு பாடல் ஒன்றையும் பாடினார். இதற்க்கு கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதே போல் இவர் பிறந்து வளர்ந்த இடம், இவர் பட்ட கஷ்டங்கள், பாடல் பாட வைக்காமல் நிராகரிக்கப்பட்ட தருணங்களும் வெளியிடப்பட்டது.
