Big Boss started political party ...

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரச்சனைகள் குறித்து கருத்து கூறி வருகிறார். அவருக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

அவரது ஸ்டைலை தெலுங்கில் பிக் பாஸ் நடத்தும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பின்பற்றத் தொடங்கிவிட்டார்.

ஜூனியர் என்.டி.ஆர். “சம சமாஜ் கட்சி” என்ற அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுதும் ஈடுபட்டுள்ளதால், இந்த சீசன் முடிந்ததும் முழுநேரமாக அரசியலில் குதிப்பார் என்று தெரிகிறது.