big boss sesson 2 celebrities

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும் பின்பு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியாக மாறியது.

பலர் இந்த இந்த நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர்களாக மாறினார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை ஓவியா என்றுக்கூட கூறலாம்.

கடந்த சீசனின் கலந்துக்கொண்ட, பிரபலங்கள் ஒருசிலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு சிலர் ரசிகர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகினர். 

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தமிழில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க உள்ளதாகவும்... இதில் கலந்துக்கொள்ள உள்ள பிரபலங்கள் இவர்கள் தான் என புகைப்பட தொகுப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளவர்கள்:

ஸ்ரீஜா

திவ்ய தர்ஷினி 

பாலா

நடிகை ரம்பா 

ரியோ

ரக்ஷிதா

சிநேகா

ரியாஸ்கான்

நந்தினி

ஆனால் இது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் நிகழ்ச்சித் தரப்பினரிடம் இருந்து வெளியாகவில்லை. 

வெளியான புகைப்படம்: