நாளை இரவு விஜய் டிவி.யின் பிக் பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் அந்நிகழ்ச்சியில் இயக்குநர் சேரனும் ஒரு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் என்ற பரபரப்பான செய்தி நடமாட ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் நாளை  ஜூன் 23 ஞாயிறு இரவு எட்டு மணி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாற்றப்படுகிறார் என்று குழப்பப்பட்ட நிலையில், அதே கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

நிகழ்ச்சியின் முதல் நாளான ஜூன் 23 அன்றுதான் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள் என்கிற நிலையில் ஒவ்வொரு இணையதளமும் தங்களது விருப்பத்திற்கு ஆளுக்கொரு பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி  அதில் பங்குபெறுவோர் பற்றிய புதிய  தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அப்பட்டியலில் டிவி நட்சத்திரம் பாத்திமா பாபு, லோஸ்லியா, துள்ளுவதோ இளமை ஷெரின், பவர் ஸ்டார் சீனிவாசன், டிவி நடிகர் கவின், நேர்கொண்டபார்வை புகழ் அபிராமி, மோகன்வைத்யா, முஜல்ராவ் ஆகியோரோடு இயக்குநர் சேரன் ஆகியோர் பங்குபெறுகிறார்கள்.இவர்கள் மட்டுமின்றி நடிகர் ராதாரவி , நடிகை ஶ்ரீரெட்டி உள்ளிட்ட சிலரும் பங்குபெறவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் உண்மையான பட்டியலை அறிய இன்னும் ஒரு நாள் காத்திருக்கத்தான் வேண்டும்.