அதன்பின்னர் தனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருப்பவருக்கு, இதுவரை சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. எனினும், ஆர்யாவின் 'டெடி', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் துக்கடா கேரக்டர்களில் சாக்ஷி நடித்து வருகிறார். 

இதில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிகராஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படமும் ஒன்று.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். முதல்முறையாக எழில் - ஜிவி பிரகாஷ் கூட்டணி சேர்ந்திருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' ஹாரர் ஃபேண்டஸி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதில் முக்கிய கேரக்டரில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு, சி.சத்யா இசையமைத்துள்ளார். 


ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, தற்போது ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

அதன்பின்னர், படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையி்ல், 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் ரிலீஸ் தேதி, நாளை (நவம்பர் 18) நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து, டிரைலர், இசை வெளியீடு என 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவிடமிருந்து அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.