பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள், என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதுவரை வித்தியாசமான டாஸ்க் கொடுத்த நிகழ்ச்சியாளர்கள் தற்போது சற்றும் மனிதாபிமானம் இன்றி, பிஸிக்கல்  வைலன்ஸ் கொடுக்கிறார்கள். 

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் டாஸ்க்குக்குகாக, யாஷிகாவின் புடவையை நறுக்கி, அவர் முகம் மீது மிளகு தூள் தூவி, தண்ணீரை ஊற்றிய விஜி அணியினர். இதனால் இன்றைய டார்கெட் ஐஸ்வர்யா என்பது இன்றைய ப்ரோமோவின் மூலம் தெரிகிறது.

தற்போது, வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஐஸ்வர்யாவை தன்னுடைய கையை ஒரு இடத்தில் வைக்கிறார். அவருடைய கை அசையும் போது, அவருக்கு தண்டனையாக விஜி அணியை சேர்ந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றுகிறார்கள்.

மேலும், அவருடைய கை அங்கிருந்து எடுக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கையின் மீது எண்ணெய், துவரம் பருப்பு கிலோ கணக்கில் அவருடைய கையில் காட்டப்படுகிறது. மேலும் ஒரு கவரை கையில் காட்டில் அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா வலியில் துடிக்கிறார். 

ஐஸ்வர்யா ஆரம்பத்தில் போட்டியாளர்களுக்கு பல தொல்லைகள் கொடுத்திருந்தாலும், டாஸ்க் என்கிற பெயரில் அவரை போட்டியாளர்கள் பழி வாங்குவது கண்டிக்க தக்கது என ரசிகர்கள் தங்களுடைய மனசாட்சியுடன் கருத்தை தெரிவித்துள்ளனர்.