பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சூரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை உருவாக்கி அதனை நடைமுறை படுத்த சொல்கிறார்கள். அந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் வியாழக்கிழமை வரை பின்பற்ற வேண்டும் என்பது விதி. இதனை மீறினால் இவர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் கொடுக்கப்படாது.

கடந்த வாரம் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் வைரம் திருடு போகாமல் பார்த்துக்கொள்வது. டாஸ்க் முடிவதற்கு முன்பே சக்தி திருடியதை ஒற்றுக்கொண்டதால் இவர்களுக்கு கொடுக்க இருந்த பொருட்கள் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து இந்த வாரத்தின் டாஸ்க் தற்போது  கொடுக்கப்பட்டுள்ளது அது  என்னவென்றால்... பாத்ரூம், கிச்சன், மற்றும் பெட்ரூம்  ஆகிய இடங்களுக்கு போக வேண்டும் என்றால் விடாமல் சைக்கிள் மிதித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பாத்ரூம் செல்லும்போது சைக்கிள் மிதிப்பதை நிறுத்திவிட்டால் தண்ணீர் வராது, பாத்ரூம்   கதவுகள் திறக்காது. கிச்சன் மிதிவண்டியை  மிதிக்காவிட்டால் கிச்சனில் சமையல் செய்வதற்கு காஸ் தடைபடும் சமைப்பதற்கு தண்ணீர் வராது. அதே போல பெட் ரூமில் சைக்கிள் மிதித்தால் தான் உள்ளே செல்ல முடியும் . இதனை போட்டியாளர்கள் வரும் வியாழ  கிழமை வரை பின்பற்ற வேண்டும்.

இப்படி ஒரு டாஸ்க் வைத்துள்ளது அனைத்து போட்டியாளர்களையும் மிகவும்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.