நேற்றய தினம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன் படி வையாபுரி மனநல மருத்துவராகவும், பிந்து மாதவி நர்ஸ், கணேஷ் வார்டு பாய்,மற்றும் சக்திக்கு வேலையாள் போன்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இதில் சினேகன் பெண்களை அதிகமாக ரசிப்பவராக இருந்து பைத்தியமானவர் என்றும் இதனால் இவர் பெண்களை போல எப்போதும் மேக்கப் போட்டுகொண்டு இருப்பார் என அறிவுறுத்தப்பட்டது.

ஜூலி ஒரு போராளி, அவர் போராட்டத்தின் போது காவலரால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து பைத்தியமாக ஆனவர். 

ஓவியா காதலனால் கைவிடப்பட்டு பைத்தியமாக ஆனவர் ரைசா, மாடலிங் செய்து நடந்து வந்தபோது, கால் தவறி கீழே விழுந்து பைத்தியமானவர் என கூறப்பட்டது. 

அதே போல ஆரவ், ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெளிவராததால் பைத்தியமானவர் என பிக் பாஸ் குரல் அனைவருக்கும் அவர்களுடைய கதாபாத்திரத்தை கூறியது.