பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் போன்று விறுவிறுப்பாக இல்லை என்றும், முதல் சீசனை பார்த்து தற்போது விளையாடி வரும் போட்டியாளர்கள் சிலர் போலியான முகத்திரையோடு நடித்து வருவதாக ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், உண்மையான கணவன் மனைவி கலந்து கொண்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய கருத்து வேறுபாடை வைத்து சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. 

அதற்கு ஏற்றபோல் இன்றைய நிகழ்ச்சியிலும் தவறாமல் இருவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள். மேலும் இன்று நித்யா நடிகர் மஹதிடமும் கடுமையான சண்டை போடுகிறார். 

சாப்பாடு விஷயத்தில் தான் இந்த சண்டை வெடிக்கிறது. பின் காதலோடு கூடிய ஒரு ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இதில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை' அழுகிறார். ஆனால் ஏன் அழுகிறார் என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும். மேலும் மஹத் ஒரு காதல் தோல்வி பாடலும் பாடுகிறார்.