big boss kamal combo food
பாலிவுட்டில் பிரபலமாகி 11 வது சீசனை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழிலும் ஹிட் ஆகியுள்ளது. தமிழில் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர்களை வைத்து பிக் பாஸ் கமல் காம்போ என்கிற பெயரில் உணவுகள் தயார்செய்து விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.
இதில் காயத்திரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா, ரைசா ரைஸ், சக்தி எக் மசாலா, சினேகன்- 65, ஜூலி ஜூஸ் ஆகியவை உள்ளது.
மேலும் இவை அனைத்தும் ரூ.200 மட்டுமே என்று ஒரு உணவகத்தில் இருந்த போர்டின் புகைப்படத்தை எடுத்து பிக் பாஸ் புகழ் காயத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

