பிக் பாஸ் நிகழ்ச்சி:

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். முதலில் இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறவே மற்ற மொழிகளிலும் துவங்கினர் ஸ்டார் குழும்பத்தினர். விரைவில் இந்த நிகழ்ச்சி தமிழில் இரண்டாவது சீசன் துவங்க உள்ளது.

பிக் பாஸ் வீடு:

தமிழில் பிக் பாஸ் நிகழ்சிக்காக பூந்தமல்லி அருகே பல கோடி மதிப்பில் பிரதேயக செட் போட்டிருந்தனர். அதே போல் கன்னட மொழில் இந்த நிகழ்ச்சிக்காக பெங்களூர் அருகே உள்ள பிடாதி என்கிற இடத்தில் அமைத்துள்ள 'இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டியில்' பிக்பாஸ் வீட்டை அமைத்திருந்தனர்.

தீ விபத்து:

இந்த பிரம்மாண்ட வீட்டில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. பிக் பாஸ் வீடு எடைகுறைவான பலவைகள் மற்றும் தெர்மாகூல் வைத்துக் கட்டப்பட்டிருந்ததால் தீ மள மள வென வீடு முழுவதும் பரவியது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் மிகபெரிய போராட்டத்திற்கு பின் தீயை அனைத்தாலும், பிக் பாஸ் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகியது. 

இதனால் சுமார் 8 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. பிக் பாஸ் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.