தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். 

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை. என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். சில விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வீடியோ வெளியிட்டனர். அதை எல்லாம் பார்த்தும் திருந்தாத மீரா மிதுன், இது தான் விஜய் ரசிகர்களின் லட்சணம் என அதையும் தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு வருகிறார். இதற்கு முன்னதாகவே மீரா மிதுனின் ஆபாச பேச்சை பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி,  விஜய்யின் நண்பர் சஞ்சீவ், நடிகர் விக்ராந்த் ஆகியோர் சோசியல் மீடியாவில் கண்டித்துள்ளனர். பிரபலங்கள் பலரும் அமைதியாக இருக்க சொன்னாலும் மீரா மிதுனின் ஆட்டம் அதிகரிப்பதை ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் மீராமிதுன் இப்படி பேசுவது கண்டிக்கதக்கது என்றும், அவர் மீது உரிய எடுக்க வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய ஜோதிகா... தஞ்சை மருத்துவமனைக்கு செய்த மாபெரும் உதவி...!

பலரும் மீரா மிதுனை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பிரபல காமெடி நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நாறு நாறாக கிழித்து தொங்கவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா, நடிகையாக இருப்பினும் ஜோ..தீ என்று எல்லா மக்களுக்கும் தெரியும்... தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது... வன்மையாக கண்டிக்கிறேன்  பெண் இனத்தின் வெட்கக்கேடு.இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா?? என பதிவிட்டுள்ளார்.