big boss fighting three roses

பாலிவுட்டில் முதல் முதலில் துவங்கப்பட்ட, பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை தாண்டியும் தற்போது 10 வது சீசனை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பாலிவுட் கலாச்சாரத்திற்கு ஒத்துப்போன இந்த நிகழ்ச்சி தமிழில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் தங்களை நல்லவர்கள் போல் காட்டி கொண்டு வரும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராமும், காமெடி நடிகை ஆர்த்தியும் இணைத்து ஜூலியை வம்பிழுத்து வந்தது அனைவரும் அறிந்தது தான். தற்போது இவர்களுடன் நடிகை நமிதாவும் கைகோர்த்துள்ளார்.

இவர்கள் மூன்று பேரும் இணைத்து ஜூலியை பற்றியும், சைத்தான் படத்தில் நடித்த ஆராவை பற்றியும் மிகவும் கேவலமாக பேசி வருகின்றனர். ஆர்த்தி ஆராவை பார்த்தால் நல்லவன் போல் தெரியவில்லை கேடி போல் தெரிகிறது என்று கூறினார்.

அப்போது அந்த இடத்தில் இருந்த ஜூலியையும் வம்பிழுக்க, நீயும் கேடி தான் என கூறினார். இதை கேட்டு நமிதாவும், காயத்ரியும் மிகவும் சந்தோஷமாக சிரித்தனர் என்பது குறிப்பிடதக்கது. 

மூவரும் சேர்ந்து ஜூலியையும் பரணியையும் பற்றி பேசும்போது நமீதா "நான் கூட எல்லாரையும் ஒரே மாத்ரி நினைச்சேன் .அந்த பொண்ணு போராட்டத்தில் பேட் லாங்குவேஜ் யூஸ் பண்ணுச்சு... பாலிடிஷியன் மாத்ரி நடக்குது.. நம்மகிட்ட பிரைன் இருக்கு.. நம்ம கல்ச்சர் வேற.." என்று கேவலமாக பேசினார். இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து கொண்டு மற்றவர்களை குறிப்பாக ஜூலியை கேவலமாக பேசுவதை ரசிகர்கள் எரிச்சலுடன் பார்த்து வருகின்றனர்.